திண்டுக்கல் சீனிவாசனுக்கு நெஞ்சுவலி..! அப்போலோ மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக முன்னாள் வனத்துறை அமைச்சராக இருந்தவர் திண்டுக்கல் சீனிவாசன். அதிமுக மூத்த தலைவரான இவர், ஜெயலலிதாவின் நம்பிக்கையானவர்களில் ஒருவராக திகழ்ந்தவர். ஜெ-வின் இறப்பிற்கு பிறகு எடப்பாடி அணியில் இருக்கும் சீனிவாசன், அண்மையில் அதிமுக-வின் பொருளாலராகவும் இவரால் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தங்கியிருக்கும் போது திடீர் நெஞ்சுவலி காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.