கடந்த சில தினங்களுக்கு முன்பு, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வின் முடிவுகள் வெளியானது. இதில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நந்தினி என்ற மாணவி, அனைத்து பாடப்பிரிவுகளிலும், முழு மதிப்பெண்கள் பெற்று, 600-க்கு 600 மதிப்பெண் வாங்கியிருந்தார்.
இதனை அறிந்த பல்வேறு அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும், அந்த மாணவிக்கு, தங்களது வாழ்த்துக்களையும், பரிசு பொருட்களையும் வழங்கினர். இந்நிலையில், மாணவி நந்தினியையும், அவர் படித்த பள்ளி முதல்வரையும் அழைத்து, பிரபல ஊடகம் ஒன்று, பேட்டி எடுத்துள்ளது.
அதில், நந்தினி இதுவரை வாங்கிய குறைவான மதிப்பெண்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், இதுவரை மொழி பாடத்தில் தான் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். அது 100-க்கு 93 மதிப்பெண்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மற்ற பாடங்களில், எப்போதும், 100-க்கு 95 மதிப்பெண்களுக்கு மேலே தான் பெறுவேன் என்றும் அவர் பதில் அளித்துள்ளார். குறைவான மதிப்பெண் 93 தான் பெறுவாரா? என்று நெட்டிசன்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.