Connect with us

Raj News Tamil

600-க்கு 600 மதிப்பெண் எடுத்து திண்டுக்கல் மாணவி சாதனை..! குவியும் வாழ்த்துக்கள்

தமிழகம்

600-க்கு 600 மதிப்பெண் எடுத்து திண்டுக்கல் மாணவி சாதனை..! குவியும் வாழ்த்துக்கள்

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது. மாணவர்கள் 91.45% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நந்தினி என்ற மாணவி பிளஸ்-2 பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மாணவி நந்தினி திண்டுக்கல் நகரில் உள்ள அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வணிகவியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்து வந்துள்ளார். 600-க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top