150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கருதப்படும் ஸ்டெகோகொரஸ் வகையை சேர்ந்த டைனோசரஸ் ஒன்றின் எலும்புக் கூடு கடந்த 2022ம் ஆண்டு அமெரிக்காவின் கொலொரடா மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
அபெக்ஸ் என பெரியிடப்பட்ட இந்த எலும்புக்கூடானது, 11 அடி (3.3 மீ)உயரமும், 27 அடி நீளமும்( 8.2 மீ) கொண்டது. மொத்தம் 319 எலும்புகள் இருக்கும் என தோராயமாக கணக்கிடப்பட்ட நிலையில், அதில் 254 எலும்புகள் உள்ளன.
இந்த எலும்புக்கூடு கடந்த 17ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏலம் விடப்பட்டது. 6 மில்லியன் டாலர் மட்டுமே ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிட்டடெல்(CITADEL) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ ஆன கென் கிரிப்பின் என்பவர் 44.6 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து ஏலத்தில் எடுத்து உள்ளார்.