நிகழ் நிதியாண்டில் ரூ.6.53 லட்சம் கோடி நேரடி வரி வசூலாகியிருக்கிறது என வருமான வரித் துறை நேற்று தெரிவித்தது.
வருமான வரித் துறை நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட தரவுகளின்படி கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி நடப்பு நிதியாண்டில் கடந்த வியாழக்கிழமை (ஆக. 10 வரையிலான சுமார் 4 மாத காலத்தில் கடந்தாண்டு நிலவரத்தைவிட 15.73 சதவீதம் கூடுதலாக ரூ.6.53 லட்சம் கோடி மொத்த நேரடி வரி வசூலாகியிருக்கிறது.
மக்களுக்குத் திருப்பிச் செல்லுத்தப்பட்ட வரி கணக்கீட்டுப் பிறகு நிகர நேரடி வரி வசூல் கடந்தாண்டை விட 17.33 சதவீதம் அதிகரித்து ரூ.5.84 கோடியாக உள்ளது.
நடப்பு நிதியாண்டில் வசூலிக்க கணிக்கப்பட்ட மொத்த நேரடி வரியில் 32.03 சதவீதம் குறிப்பிட்ட இந்தக் காலக்கட்டத்திலேயே வசூலாகியுள்ளது.
அதே வேளையில், சுமாா் ரூ.69,000 கோடி வரி மக்களுக்குத் திரும்பி செலுத்தப்பட்டுள்ளது. கடந்தாண்டு நிலவரத்தை விட 3.73 சதவீதம் கூடுதலாக வரி இந்தக் காலக்கட்டத்தில் திரும்ப செலுத்தப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 10-ஆம் தேதி வரையிலான நேரடி வரி வசூல் நிலவரம் நிலையான வளா்ச்சியைப் பதிவு செய்கிறது’ என்றது.