விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் பின்னணி பணிகளில் வெற்றிமாறன் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா வை ஹீரோவாக வைத்து வாடிவாசல் என்ற படத்தை இயக்க உள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டியை மையமாக கொண்டு உருவாக உள்ள இந்த படத்தின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில் வாடிவாசல் படம் தொடர்பான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிகரும் இயக்குனருமான அமீர் நடிக்க உள்ளார். ஏற்கனவே, வெற்றி மாறனின் வட சென்னை படத்தில் ராஜன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அமீர் அசத்தி இருப்பார். இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.