தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரஜினிக்கு, ஐஸ்வர்யா என்ற மகள் உள்ளார். 3, வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கியுள்ள இவர், தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில், இவர் தேனாம்பேட்டை காவல்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது வீட்டில் வைத்திருந்த லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, திருடப்பட்டுள்ளதாக, கூறியுள்ளார்.
மேலும், வீட்டில் பணிபுரியும் 2 பெண் ஊழியர்கள் மீதும், ஒரு ஆண் ஊழியர் மீதும், தனக்கு சந்தேகம் இருப்பதாகவும், அந்த புகாரில் அவர் தெரிவித்துள்ளார். இந்த புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.