இயக்குநர் அமீர் இயக்கத்தில் கார்த்தி அறிமுகமாகியிருந்த திரைப்படம் பருத்தி வீரன்.
கிராமப்புறங்களில் உள்ள மனிதர்களின் பிரதிபலிப்பாக வெளியான இந்த திரைப்படம், பெரும் வெற்றியை பதிவு செய்தது.
இப்படம் தான் கார்த்தியின் முகவரியாகவும் மாறியது. இந்நிலையில், இப்படத்தில் முதன்முதலில் நடிக்க இருந்தது, பிரபல மாஸ் நடிகர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, இந்த திரைப்படத்தில், நடிகர் சூர்யா தான், முதலில் நடிக்க இருந்தார். ஆனால், படத்தின் கதை நன்றாக இருந்ததால், அதனை தனது தம்பி கார்த்திக்கு, சூர்யா பரிந்துரைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் சூர்யா நடித்திருந்தால், படம் இன்னும் பெரிய வெற்றியை பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.