அசோக் செல்வன், ரித்திகா சிங், விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில், கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஓ மை கடவுளே.
பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படத்தை, அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார். இந்த படம் வெளியாகி, 3 ஆண்டுகள் ஆகியும், வேறு எந்தவொரு படத்திலும், அவர் கமிட்டாகாமலே இருந்தார்.
இந்நிலையில், இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த படத்தில், இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தான் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.