வாழை பார்த்துவிட்டு இயக்குநர் பாலா கொடுத்த ரியாக்ஷன் என்ன?

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை இயக்கியவர் மாரி செல்வராஜ். தமிழின் முன்னணி இயக்குநராக இருக்கும் இவர், தற்போது வாழை என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

நாளை வெளியாக உள்ள இப்படம், இயக்குநர் பாலாவிற்காக இன்று திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்த்த அவர், மிகவும் உணர்ச்சிவப்பட்டுள்ளார்.

மேலும், படத்தை பார்த்து முடித்தபிறகு, இயக்குநர் மாரி செல்வராஜை கட்டி அணைத்து, அவருக்கு முத்தம் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பான வீடியோவும், புகைப்படங்களும், இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது. இதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும், இந்த சம்பவம் அதிகரித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News