தி கோட் படத்திற்கு பிறகு, எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் தனது கடைசி படத்தில், நடிகர் விஜய் நடித்து வருகிறார். இந்த திரைப்படம், அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் கதையில் எச்.வினோத் சில மாற்றங்களை செய்துள்ளதாக தகவல் ஒன்று, இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது, தற்போது விஜயை வைத்து எடுக்கப்பட்டு வரும் படத்தின் கதை, முதலில் நடிகர் கமலுக்கு தான் கூறப்பட்டதாம்.
இந்த கதையில் நடிக்கிறேன் என்று ஒப்புக் கொண்ட கமல், பின்னர், வேறு படங்களில் பிசியாக நடித்து வந்தார். இதனால், இதே கதையை விஜயிடம் கூறிய எச்.வினோத், அதனை தற்போது துவங்கியிருக்கிறார்.
கமலிடம் இந்த கதையை கூறியபோது, அவரது மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஏற்ற சில கருத்துக்கள், இப்படத்தில் இருந்துள்ளதாம். ஆனால், தற்போது விஜய் இப்படத்தில் நடிப்பதால், அவரது கட்சி கொள்கைக்கு ஏற்றவாறு, சில மாற்றங்களை எச்.வினோத் செய்துள்ளாராம்.