ஜோசப் விஜய்.. சர்ச்சையான முறையில் வாழ்த்து சொன்ன பிரபல இயக்குநர்..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய், சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை தான், பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த அறிக்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கமெண்ட்ஸ்கள் தொடர்ந்து பதிவாகிய வண்ணம் தான் இருந்து வருகிறது. அதாவது, நடிகர் விஜய் அரசியலில் நுழைவதாக கடந்த 2-ஆம் தேதி அன்று கூறியிருந்தார்.

இதற்கு, திரை வட்டாரத்தில் இருந்தும், அரசியல் வட்டாரத்தில் இருந்தும் எதிர்ப்பு மற்றும் ஆதரவு ஒருசேர கிடைத்தது.

இந்நிலையில், இயக்குநரும், திராவிட பற்றாளருமான இயக்குநர் கரு பழனியப்பன், தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், திரை வெற்றிக்காக அரசியலை பயன்படுத்தாமல், திரைப்பயணம் முடித்துவிட்டு அரசியலுக்கு வருவேன் என்று சொல்லும் விஜய் பாராட்டுக்கு உரியவர். அரசியல் அரங்கிற்கு வருவதை வரவேற்கிறோம்.. களத்தில் சந்திப்போம் ஜோசப் விஜய் என்று கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News