மங்கை படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மேற்கு தொடர்ச்சி மலை படத்தின் இயக்குநர் லெனின் பாரதி கலந்துக் கொண்டு, சிறப்புரையாற்றியிருந்தார்.
அப்போது, நடிகை த்ரிஷா குறித்து தற்போது பரவி வரும் சர்ச்சை குறித்தும் அவர் பேசியிருந்தார்.
அதாவது, “நடிகர்கள் யாருமே நடிகை திரிஷாவின் விஷயத்தை பற்றி கேட்காமல் இருப்பதாக வெங்கட் பேசும்போது தெரிவித்தார்.
எப்படி கேட்பார்கள்? இன்றைக்கு இருக்கும் அத்தனை முன்னணி நடிகர்களும் பெண் உடலை வைத்து தான் சினிமாவில் வெற்றி பெற்றுள்ளனர்.
உச்ச நடிகர்கள் ஆகட்டும், நாட்டை ஆள துடிக்கிற நடிகர்கள் ஆகட்டும் அவர்களின் ஆரம்ப கால சினிமாவை எடுத்துக் கொண்டால், பெண் உடலை மையமாக வைத்து தான் பயணப்பட்டு வந்துள்ளார்கள்.
நான் சிறுவனாக இருக்கும்போது ரஜினி, கமல் படங்களின் போஸ்டரில் சில்க் ஸ்மிதா படம் தான் பெரிதாக இருக்கும். அப்படி ஆணாதிக்க சமூகத்தில் இருக்கும் இந்த ஹீரோக்கள் இதனை எதிர்த்து கேள்வி கேட்க மாட்டார்கள்.” என்று பரபரப்பாக பேசியுள்ளார்.