Connect with us

Raj News Tamil

அஜித்துக்கு பின் விஜய்சேதுபதி தான்.. வெற்றியை பாராட்டும் லோகேஷ்..

சினிமா

அஜித்துக்கு பின் விஜய்சேதுபதி தான்.. வெற்றியை பாராட்டும் லோகேஷ்..

பொதுவாக நடிகர்களின் 50-வது படங்கள், பெரிய வெற்றியை பெற்றது கிடையாது என்று, சினிமாவில் கூறப்படுவது உண்டு.

ஆனால், நடிகர் அஜித்தின் 50-வது படமான மங்காத்தா, ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகி, அந்த கருத்தை பொய்யாக்கியது.

அந்த வகையில், தற்போது விஜய்சேதுபதி நடித்துள்ள அவரது 50-வது படமான மகாராஜாவும், அந்த கருத்தை பொய்யாக்கி, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மகாராஜா படத்திற்கு சிறப்பான ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது என்றும், விஜய்சேதுபதி, அனுராக் காஷ்யப், பிலோமின் ராஜ், நித்திலன் ஸ்வாமிநாதன் ஆகிய படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

More in சினிமா

To Top