Connect with us

Raj News Tamil

அஜித்தும் இல்ல.. ஜெயம் ரவியும் இல்ல.. பிரபல மாஸ் ஹீரோவுடன் மோகன் ராஜா கூட்டணி!

சினிமா

அஜித்தும் இல்ல.. ஜெயம் ரவியும் இல்ல.. பிரபல மாஸ் ஹீரோவுடன் மோகன் ராஜா கூட்டணி!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் மோகன் ராஜா. பொதுவாக ரீமேக் படங்களை மட்டுமே தொடர்ச்சியாக இயக்கி வந்த இவர், தற்போது தனது சொந்த கதையில் படங்களை இயக்கத் தொடங்கியுள்ளார்.

அந்த வகையில், தனி ஒருவன், வேலைக்காரன் ஆகிய இரண்டு, தரமான படங்களை மக்களுக்கு கொடுத்துள்ளார். தற்போது தனி ஒருவன் 2 -ஆம் பாகத்திற்கான பணியில் இருக்கும் இவர், அஜித்துக்கும் கதை கூறியிருந்தார்.

அந்த கதையும் அவருக்கு பிடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனி ஒருவன் மற்றும் அஜித்தின் படங்களை தொடங்குவதற்கு முன்பு, நடிகர் சிரஞ்சீவியை வைத்து புதிய படம் ஒன்றை, மோகன் ராஜா தொடங்க உள்ளாராம்.

இந்த படத்தை முடித்தபிறகு, தனி ஒருவன் 2-ஆம் பாகத்தையும், அதன்பிறகு அஜித்தின் படத்தையும், அவர் இயக்க இருப்பதாக, சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

More in சினிமா

To Top