ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் வரும் 27-ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. வாக்குபதிவுக்கான நாள் நெருங்க இருப்பதால், அனைத்து கட்சியினரும், அனல் பறக்க பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். இவ்வாறு இருக்க, அதிமுக தொகுதியின் வேட்பாளரை ஆதரித்து, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, வாக்கு சேகரித்து வந்தார்.
அப்போது பேசிய அவர், நீ சரியான ஆம்பளையா இருந்தா? மீசை வெச்ச ஆம்பளையா இருந்தா? வேட்டி கட்டுற ஆம்பளையா இருந்தா? சூடு சொரணை வெட்கம் மானம் இருந்தா? நேரடியாக வந்து வாக்காளர்களை சந்திக்கணும்.. எங்களை எதிர்க்க உங்களுக்கு சக்தி இல்ல.. என்று பயங்கர ஆவேசமாக பேசினார். இதில், ஆம்பளையா இருந்தா? என்று அடுக்கடுக்காக அவர் பேசியது, இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பதிவிட்டுள்ள இயக்குநர் நவீன், “ஆம்பளயா இருக்கறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு. உங்கள் தலைவர் இரும்புப்பெண் ஜெயலலிதா அம்மையார் ஆம்பளயா? நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா? இன்னும் எத்தனை காலம் இந்த stereotype வசனம் பேசுவீங்க? இது பெண்களை இழிவு படுத்தும் செயல்” என்று கடுமையான பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
இதேபோல், திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும், ஈபிஎஸ்-ன் பேச்சை கடுமையான கண்டித்துள்ளார். “ரூபாய் 50,000 பணம் இருந்தால் போதும், யார் வேண்டுமானாலும், ஆணாகவும், பெண்ணாகவும் மாற முடியும்.. ” என்று கூறி விமர்சித்துள்ளார்.