மே 3-ஆம் தேதி.., – முக்கிய அப்டேட் தந்த நெல்சன்..!

கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். இந்த படத்திற்கு பிறகு, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் ஆகிய படங்களை இயக்கி முடித்திருக்கிறார்.

இந்த படங்களுக்கு பிறகு, அவர் ஜெயிலர் 2-ஆம் பாகத்தை எடுக்க இருப்பதாகவும், நடிகர் தனுஷை வைத்து புதிய படம் இயக்க இருப்பதாகவும், பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார், தனது எக்ஸ் பக்கத்தில், புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-

“ நான் 20 வயதாக இருக்கும்போது, மீடியாவிலும், பொழுதுபோக்குத்துறையிலும், எனது பயணம் தொடங்கியது. இத்தனை வருடங்களில், பல்வேறு ஏற்ற, இறக்கங்கள், இந்த துறையில் என்னுடைய வளர்ச்சிக்கு முக்கிய பங்கு ஆற்றியிருக்கிறது.

இதற்கிடையே, சொந்தமான தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்க வேண்டும் என்பது என்னுடைய நிலையான ஆசையாக இருந்துள்ளது. இன்று, ‘Filament Pictures’! என்ற என்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்குவது குறித்து அறிவிப்பதில், பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை மகிழ்விப்பதற்கான, சுவாரசியமான படைப்புகளை உருவாக்குவது தான், எங்கள் நிறுவனத்தின் முக்கிய நோக்கம் . நாங்கள் தற்போது தொடங்கியிருக்கும் ஒரு படைப்பு, எங்களது நோக்கத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும்” என்று கூறினார்.

மேலும், நெல்சன் தயாரிக்க உள்ள படத்தின் அறிவிப்பு, மே 3-ஆம் தேதி அன்று வெளியாகும் என்றும், உங்களது ஆதரவுக்கு நன்றி என்றும், அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News