சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில், கவின் நடிப்பில் உருவான திரைப்படம் ப்ளெடி பெக்கர். வித்தியாசமான கதைக் களத்துடன் உருவாகியிருந்த இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது.
இயக்குநரும், இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளருமான நெல்சனை நம்பி, இந்த திரைப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கும், பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு இருக்க, இயக்குநர் நெல்சன் தற்போது அதிரடி முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தன்னை நம்பி படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு, நஷ்டத் தொகை தருவதாக நெல்சன் முடிவு எடுத்துள்ளாராம்.