கோலமாவு கோகிலா, டாக்டர் என தொடர்ச்சியாக இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் நெல்சன் திலீப் குமார். இதையடுத்து விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். ஆனால் பீஸ்ட் படம் தோல்வி அடைந்தது.
தற்போது ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். தற்போது ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில் நெல்சன் அவமானப்படுத்தப்பட்டதாக ட்விட்டரில் வீடியோ வெளியாகி இருக்கிறது. அதாவது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வரும்போது அவரை சுற்றி பவுன்சர்கள் அவர் மேடை ஏறும் வரை செல்கின்றனர். ஆனால் நெல்சன் வந்த போது சில பவுன்சர்கள் சற்று தூரத்திற்கு மட்டுமே வந்துவிட்டு பிறகு நீங்களே சென்று விடுங்கள் என கூறியுள்ளனர்.
இதை பார்த்த நெட்டிசன்கள் அந்த விழா நடத்தியவர்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.