விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சமயத்தில், இயக்குநர் பா.ரஞ்சித், படம் குறித்து பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.
அப்போது பேசிய அவர், “ஒரு சிலை செதுக்கும் சிற்பியிடம் ஒரு களிமண் தன்னை முழுவதுமாக ஒப்புக் கொடுப்பது போல், விக்ரம் என்னிடம் தன்னை ஒப்புக் கொடுத்தார்” என்று தெரிவித்தார்.
மேலும், அனைத்து களிமண்ணிலும் சிலை செய்ய முடியாது. அதற்கான தன்மைகள் இருக்கும் களிமண்ணில் தான் சிலை செதுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
நடிகர் விக்ரமின் அர்ப்பணிப்பை, இயக்குநர் பா.ரஞ்சித், களிமண்ணுடன் ஒப்பிட்டு பேசியிருப்பது, சிறப்பான உவமையாக பார்க்கப்படுகிறது.