Connect with us

Raj News Tamil

TEENZ படத்தின் டிக்கெட் விலையை குறைத்த பார்த்திபன்!

சினிமா

TEENZ படத்தின் டிக்கெட் விலையை குறைத்த பார்த்திபன்!

பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரித்துள்ள திரைப்படம் TEENZ. குழந்தைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள த்ரில் திரைப்படமான இது, வரும் 12-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

அதே தேதியில், கமலின் இந்தியன் 2 திரைப்படமும் ரிலீஸ் ஆவதால், இப்படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், இப்படத்திற்கு புரமோஷன் செய்யும் வகையில், பார்த்திபன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், என் படத்திற்கு நானே வரி விலக்கு அளிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், படத்தின் டிக்கெட் விலையை, முதல் சில நாட்களுக்கு மட்டும், 100 ரூபாய்க்கு குறைத்துக் கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

ரசிகர்களை கவருவதற்காக, பார்த்திபன் இத்தகைய முடிவுகளை எடுத்திருந்தாலும், கதையும், திரைக்கதையும் தான், படத்தை வெற்றி பெறவைக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

More in சினிமா

To Top