“விஜய் அப்படி சொன்னதும் நான் பயந்துட்டேன்” – பேரரசு

திருப்பாச்சி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பேரரசு. இந்த படத்திற்கு பிறகு, சிவகாசி, திருப்பதி, தர்மபுரி, திருத்தனி, பழனி என்று பல்வேறு படங்களை அவர் இயக்கி இருக்கிறார். தற்போது, படவாய்ப்புகள் இன்றி தவித்து வரும் இவர், பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகிறார்.

இந்நிலையில், சதுரங்க ஆட்டம் ஆரம்பம் என்ற படத்தின் தொடக்க விழா, சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட இயக்குநர் பேரரசு, சிறப்புரையாற்றியிருந்தார்.

அப்போது பேசிய அவர், “நான் ஒரு அறிமுக இயக்குநர். நான் கதை கூறியதும், படத்தில் நடிப்பதற்கு விஜய் ஒத்துக் கொண்டார். அவர் உடனே ஒத்துக் கொண்டதை பார்த்து, எனக்கும் பயம் வந்தது. படத்தை சிறப்பாக எடுக்க வேண்டும் என்று பயம் வந்தது” என்று கூறினார்.

மேலும், இப்போது உள்ள மக்கள் விமர்சகர்களாகவே உள்ளனர். எனவே, அவர்களுக்கு பயந்து, படத்தை சிறப்பான முறையில் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News