சாதிய சர்ச்சை.. பதிலடி கொடுத்த அமரன் பட இயக்குநர்!

சிவகார்த்திகேயன் நடித்திருந்த அமரன் திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியிருந்தது.

இந்த திரைப்படத்தை பார்த்த சிலர், இதில், மேஜர் முகுந்த் வரதராஜனின் சாதிய அடையாளம், திட்டமிட்டே மறைக்கப்பட்டிருப்பதாக விமர்சித்தனர்.

இது, சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்கு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அமரன் வெற்றி விழாவில் பேசிய அவர், மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு, தமிழன், இந்தியன் என்ற அடையாளத்தை மட்டும் கொடுங்கள். அதை தான் அவர் விரும்புவார் என அவரது தந்தை கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் எந்த சமூகத்தை சேர்ந்தவர் என்பது, முக்கியமான விஷயமாக என் பார்வையில் தெரியவில்லை என்றும் இயக்குநர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News