Connect with us

Raj News Tamil

அடுத்த அதிரடி கட்டத்திற்கு சென்ற பிரபல இயக்குநர்?

சினிமா

அடுத்த அதிரடி கட்டத்திற்கு சென்ற பிரபல இயக்குநர்?

குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி உள்ளவர் ராஜு முருகன்.தற்போது, இவர் நடிகர் கார்த்தியை வைத்து, ஜப்பான் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம், வரும் பொங்கல் பண்டிகை அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இயக்குநர் ராஜு முருகன், அதிரடி முடிவு ஒன்றை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, எஸ்.பி. சினிமாஸ் என்ற நிறுவனத்தோடு இணைந்து, புதிய திரைப்படம் ஒன்றை ராஜு முருகன், தயாரிக்க உள்ளாராம்.

இந்த திரைப்படத்தை, எழில் என்ற அறிமுக இயக்குநர் தான், இயக்க உள்ளாராம். இப்படத்தின், நடிகர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

More in சினிமா

To Top