முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய இரண்டு ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் ராம்குமார். இந்த படங்களுக்கு பிறக, நடிகர் தனுஷ் உடன், இவர் கூட்டணி வைக்க இருப்பதாக, தகவல் வெளியானது. ஆனால், பல மாதங்கள் ஆகியும், தனுஷின் கால்ஷீட் கிடைக்காததால், மீண்டும் விஷ்ணு விஷாலுடன் அவர் கூட்டணி வைத்துள்ளார்.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தான், இந்த திரைப்படத்தை முதலில் தயாரித்து வந்தது. ஆனால், படப்பிடிப்பு அதிக நாட்கள் ஆனதால், படத்தில் இருந்து அந்த நிறுவனம் விலகிவிட்டது. தற்போது, அந்த படத்தை, விஷ்ணு விஷாலே தயாரித்து வருகிறார். இவ்வாறு இருக்க, இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.
அதாவது, இதுவரை 126 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ள நிலையில், இன்னும் 30 நாட்கள் மட்டும் படப்பிடிப்பு உள்ளதாம். இந்த வெற்றிக் கூட்டணி, மீண்டும் சேர்ந்துள்ளதால், படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.