என்னது சங்கியா?? நான் சங்கியும் இல்ல…லுங்கியும் இல்ல – சீனு ராமசாமி பதில்

டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி கடந்த 28ம் தேதி திறந்து வைத்தார். இதையடுத்து சோழர் ஆட்சி முறையின் அடையாளமான செங்கோலை மக்களவையில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே வைத்தார்.

தமிழகத்தின் செங்கோல் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டதற்கு பலரும் பிரதமர் மோடிக்கு நன்றி கூறி வந்த நிலையில் பிரபல இயக்குனர் சீனு ராமசாமியும் பிரதமர் மோடிக்கு நன்றி கூறினார். அப்போது பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் நீங்களும் சங்கியா என கேட்டு விமர்சனம் செய்து வந்துள்ளனர்.

நான் சங்கியுமல்ல, அங்கியுமல்ல, லுங்கியுமல்ல, டர்பன்னும் அல்ல, நீலவான் அல்ல என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News