தனது வாழ்க்கையில் நடந்த மிகவும் துயரமான ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து, மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் தான் வாழை.
இயக்குநர்களும், நடிகர்களும், சினிமா ரசிகர்களும், இப்படத்தை பார்த்துவிட்டு, தங்களது கண்ணீரையும், வலியையும் தொடர்ச்சியாக பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், இயக்குநர் ஷங்கரும், இந்த படத்தை பார்த்துவிட்டு, தனது கருத்துக்களை கூறியுள்ளார்.
அதாவது, “வாழை ஒரு Disturbing-ஆன திரைப்படம். இன்னும் கூட, அந்த திரைப்படத்தில் இருந்து என்னால் வெளியே வர முடியவில்லை.
திரைப்படத்தில் கதாபாத்திரங்கள் வாழைத்தாரை தூக்கிச் செல்லும்போது, நமக்கு அந்த வலி உணர முடிகிறது. இனிமேல் வாழைப்பழம் சாப்பிடும்போது, இவர்கள் தான் என் ஞாபகத்துக்கு வருவார்கள்.
இதனால், அந்த பழம் தித்திக்குமா என்றுகூட எனக்கு தெரியவில்லை. இந்த திரைப்படம் ஒரு இலக்கியம் போல் உள்ளது” என்று பாராட்டியுள்ளார்