Connect with us
Raj News Tamil

Raj News Tamil

ஒரே வருடத்தில் 3 படங்கள்.. பட்டைய கிளப்பும் பிரம்மாண்ட இயக்குநர்!

சினிமா

ஒரே வருடத்தில் 3 படங்கள்.. பட்டைய கிளப்பும் பிரம்மாண்ட இயக்குநர்!

அதிக வெற்றி சதவிகிதம் கொண்ட இயக்குநர்களில் முன்னணியில் இருப்பவர் இயக்குநர் ஷங்கர். இவர் இயக்கத்தில் கடைசியாக 2018-ஆம் ஆண்டு அன்று, 2.0 என்ற திரைப்படம் வெளியானது.

அதன்பிறகு, இந்தியன் படத்தின் 2-ஆம் பாகத்தை எடுக்க இருப்பதாக, 2020-ஆம் ஆண்டு அன்று அறிவிப்பு வெளியானது. ஆனால், சில பிரச்சனைகளின் காரணமாக, அப்படத்தின் ஷீட்டிங் தள்ளிப்போகிக் கொண்டே சென்றது.

ஒரு வழியாக, அப்படத்தின் ஷீட்டிங்கை முடித்த ஷங்கர், அதன் பின்னணி பணிகளில் மும்மரமாக இறங்கியுள்ளார். இதுமட்டுமின்றி, 2-ஆம் பாகத்திற்காக எடுக்கப்பட்ட காட்சிகள் அதிகமாக இருந்ததால், இன்னும் கொஞ்சம் கூடுதல் காட்சிகளை எடுத்து, 3-வது பாகத்தையும் எடுத்து முடிக்கலாம் என்று, ஷங்கர் முடிவு செய்தார்.

அதன்படி, 3-வது பாகத்திற்கான ஷீட்டிங்கும் நடக்க உள்ளது. இதுமட்டுமின்றி, தெலுங்கில், ராம் சரனை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தையும் ஷங்கர் இயக்கி வந்தார்.

அந்த திரைப்படத்தின் பணிகளும், விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆக மொத்தம் 3 திரைப்படங்களின் வேலையை ஆரம்பித்த ஷங்கர், இன்னும் ஒரு படத்தை கூட முழுவதுமாக முடிக்காமலே இருந்து வருகிறார்.

இந்நிலையில், இந்த 3 திரைப்படங்களும், இந்த ஒரே வருடத்தில் ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, இந்தியன் 2 திரைப்படம், வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி அன்றும், கேம் சேஞ்சர் திரைப்படம், வரும் தீபாவளி பண்டிகை அன்றும், இந்தியன் 3 திரைப்படம், வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்றும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

More in சினிமா

To Top