ஒரே வருடத்தில் 2-வது மனைவியை விவாகரத்து செய்த அஜித் பட நடிகர்!

சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் வீரம். இந்த திரைப்படத்தில் அஜித் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தவர் நடிகர் பாலா.

சிறுத்தை சிவாவின் சகோதரரான இவர், பாடகி அம்ருதா சுரேஷ் என்பவரை, திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், 11 ஆண்டுகளுக்கு பிறகு, ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

பின்னர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், எலிசபெத் என்ற மருத்துவரை திருமணம் செய்துக் கொண்டார். தற்போது, அவரையும், பாலா விவாகரத்து செய்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், என் வாழ்வின் மிகவும் வேதனையான நாட்கள் என்று கூறியுள்ளார்.