Connect with us

Latest Tamil News, Tamil Nadu News Today, இன்றைய செய்திகள்

அட்லிக்கு பிறகு பாலிவுட் செல்லும் இன்னொரு தமிழ் இயக்குநர்?

சினிமா

அட்லிக்கு பிறகு பாலிவுட் செல்லும் இன்னொரு தமிழ் இயக்குநர்?

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என்று தொடர் வெற்றிப் படங்களை கொடுத்த அட்லி, இந்தியில் ஜவான் என்ற படத்தை இயக்கியிருந்தார்.

பெரும் வரவேற்பை பெற்ற ஜவான், உலகம் முழுவதும் 2 ஆயிரம் கோடியை வசூலித்து, ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இதனால், இயக்குநர் அட்லிக்கு, பாலிவுட்டில் படம் இயக்கும் வாய்ப்பு, தொடர்ச்சியாக கிடைத்து வருகிறது.

இந்நிலையில், இன்னொரு தமிழ் இயக்குநருக்கு, பாலிவுட்டில் படம் இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாம். அதாவது, இயக்குநர் சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 திரைப்படம், தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் இந்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தை பார்த்த நடிகர் அக்ஷய் குமார், சுந்தர் சி-க்கு அழைப்பு விடுத்துள்ளாராம். இந்த சந்திப்பு சுமூகமாக முடிந்தால், சுந்தர் சி பாலிவுட்டில் படம் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top