லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி திரையருங்குளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் லியோ படத்தின் வசனகர்த்தாவான ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் விஜய் நடித்ததிலேயே ஜே.டி கதாபாத்திரம் தான் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் என்று தெரிவித்துள்ளார். மேலும், மாஸ்டர் படத்தின் இடைவேளை வேற லெவல் என்று பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து ரசிகர் ஒருவர், லியோ வெளிவந்த பிறகு, உங்கள் கருத்து மாறுமா? என்று கேட்டுள்ளார். இதற்கு ரத்னகுமார் மாஸ்டர் படத்தைவிட லியோவின் இடைவேளை காட்சி மிகவும் நன்றாக இருக்கும் என பதிலளித்துள்ளார். இந்த தகவலால் லியோ படத்தின் மீது இன்னும் எதிர்பார்ப்பு அதிமாகியுள்ளது.