இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
மிகவும் வழக்கமான கதை என்றும், தெலுங்கு திரைப்படம் போல் உள்ளது என்றும், சீரியல் மாதிரி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் பல்வேறு விதமான கமெண்ட்ஸ்களை விஜயின் ரசிகர்களே கூறி வந்தனர். இந்நிலையில், இயக்குநர் வம்சி, பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில், வாரிசு படத்தின் மீதான விமர்சனத்திற்கு எதிராக, ஆவேசமாக பேசியுள்ளார். “திரைப்படம் எடுப்பது ஜோக் கிடையாது. நாங்கள் நிறைய உழைத்திருக்கிறோம்.. நிறைய தியாகம் செய்திருக்கிறோம்..” என்று பேசியுள்ளார். மேலும், “சீரியல் போல் படம் இருப்பதாக சிலர் சொல்கிறார்கள்.. சீரியல் எடுப்பது மட்டும் சாதாரண விஷயமா?.. பெண்கள் அதனைத் தான் விரும்புகிறார்கள்.. அது எடுப்பதும் சாதாரண விஷயம் அல்ல” என்று காட்டமாக பேசியுள்ளார்.
இதற்கு பதிலடி தந்த நெட்டிசன்கள், “நாங்களே உழைத்து சம்பாதித்த பணத்தை வைத்து தான் படத்தை பார்க்க வருகிறோம்.. அந்த பணத்திற்கு ஏற்ற திரைப்படத்தை கொடுக்க வேண்டும்” என்றும், “கோடி கணக்கில் வாங்கும் சம்பளத்திற்காக தானே அவ்வளவு உழைக்கிறீர்கள்.. அதற்கு பிறகு எதற்கு இப்படி பேசுறீங்க” என்றும் கூறி வருகின்றனர்.
மேலும், ” படம் சீரியல் போல் இருந்தால், அப்படி தான் சொல்வார்கள்.. அதற்கு எதுக்கு இவ்வளவு கோபமாக பேசுறீங்க” என்றும் கமெண்ட்ஸ் பதிவிட்டுள்ளனர். இவ்வாறு வளைச்சி வளைச்சி நெகட்டிவ் விமர்சனங்களால், அந்த பதிவு நிறைந்துள்ளது. அத்தி பூ பூத்தது போல.. அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே பாசிட்டிவ் விமர்சனங்கள் அந்த பதிவில் கிடைத்துள்ளது.