Connect with us

Raj News Tamil

எதிரே வந்த பெண்.. திடீரென பைக்கை நிறுத்திய நபர்.. பொதுவெளியிலேயே செய்த அசிங்கமான காரியம்..

இந்தியா

எதிரே வந்த பெண்.. திடீரென பைக்கை நிறுத்திய நபர்.. பொதுவெளியிலேயே செய்த அசிங்கமான காரியம்..

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற பேச்சு, சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. இதனால், பெண் பிள்ளைகளை பெற்றவர்கள், இரவு நேரங்களில் தனியாக வெளியில் அனுப்புவதற்கு மிகவும் அஞ்சுகின்றனர்.

ஆனால், தற்போது வெளியாகியுள்ள வீடியோவை வைத்து பார்க்கும்போது, பட்டப்பகலில், நடுரோட்டில் கூட பாதுகாப்பு இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

அதாவது, எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், மேற்கு வங்க மாநிலம் பாசிர்ஹத் மாவட்டத்தில் உள்ள சாலை ஒன்றில், இளம்பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றார். அந்த சமயத்தில், அங்கு பைக்கில் வந்த நபர் ஒருவர், திடீரென அதனை நிறுத்தியுள்ளார்.

பின்னர், நடுரோட்டிலேயே, தனது சுய இன்பம் செய்திருக்கிறார். மேலும், அந்த பெண்ணை தொடர்ச்சியாக பார்த்த நபர், அவர் பின்னாலே சென்றார்.

ஆனால், அந்த சாலையில், மற்ற வாகனங்கள் வந்துவிட்டதால், மீண்டும் தனது பைக்கில் ஏறி, அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார். வீடியோவை பார்த்த பலரும், அந்த வாகன ஓட்டி மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

More in இந்தியா

To Top