ஆ.ராசா மீது வழக்குப் பதிவு செய்யக்கோரிய மனு தள்ளுபடி!

இந்து மதத்தினரை அவமதித்து விட்டதாக ஆ.ராசா மீது வழக்குப் பதிவு செய்யக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை பெரியார் திடலில் கடந்த மாதம் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு நடந்த பாராட்டு விழாவில், இந்து மதத்தினர் குறித்து ஆ.ராசா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இது தொடர்பாக, ஆ.ராசா மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜோசப் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆ.ராசா மீது வழக்குப் பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என காவல்துறை கூறிய வாதத்தை ஏற்று மனுவை தள்ளுபடி செய்தது.