பிரதமர் மோடி பெயர் குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விசாரணையில் சூரத் நீதிமன்றம் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
இந்நிலையில் அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ல் பிரிவு 8 (3)-ன்படி 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகள் உடனடியாக பதவி இழப்பார்கள் என்று வகுக்கப்பட்டுள்ளது.