“இரண்டு ஆண்கள் பாசமாக பேசினாங்க.. அப்புறம் ஆடையை கிழித்தாங்க” – பகீர் கிளப்பிய ஆட்சியர் திவ்யா!

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த திவ்யா, கேரள மாநிலம் பத்தணந்திட்டா மாவட்டத்தில், ஆட்சியராக பணியாற்றி வருகிறார். குழந்தைகள் பாதுகாப்பு துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சி முகாமை தொடங்கி வைத்த இவர், அந்நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ஒன்றாம் வகுப்பு படித்தபோது, பாசமாக பேசி பழகிய இரண்டு ஆண்கள், தன்னிடம் அத்துமீறி நடக்க முயற்சித்தனர் என்று தெரிவித்தார். ஆனால், பெற்றோர் கொடுத்த தைரியத்தால், அந்த சம்பவத்தில் இருந்து தன்னால் மீள முடிந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய திவ்யா, குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் என்றால், என்னவென்பதை சொல்லித்தர வேண்டும் என்றும், குழந்தைகள் பாலியல் தொல்லையில் சிக்காமல், அவர்களை பாதுகாக்க வேண்டியது இந்த சமூகத்தின் கடமை என்றும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News