கரூர் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக் கொண்டார். அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் ஆகியோர் இணைந்து, உதயநிதி ஸ்டாலினை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதுகுறித்து பதிவு வெளியிட்ட சவுங்கர் சங்கர், அதிகாரிகள் அதிகாரிகளை போல் செயல்படுங்கள். அடிமைகளைப் போல் செயல்படாதீர்கள். இது உங்கள் பதவிக்கு அழகல்ல. காலில் விழுந்த போட்டோவையும் பதிவிடுங்கள் என்று அதிரடியாக கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், “அதிகாரிகள், மத்திய, மாநில அரசுகளைச் சேர்ந்த அமைச்சர்களை வரவேற்பது என்பது அதிகாரபூர்வ நெறிமுறை. அரசியல் கட்சி வேறுபாடின்றி அதிகாரத்திலுள்ள அனைவருக்கும் வரவேற்பளிப்பது வழக்கமான ஒன்றுதான்” என்று கூறி, சமீபத்தில் கரூர் மாவட்டத்துக்கு வந்திருந்த மத்திய ரயில்வே இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஸ்க்கு வரவேற்பு அளித்த புகைப்படத்தையும் இணைத்து, சவுக்கு சங்கருக்கு பதிலளித்திருக்கிறார்.