மாவட்ட அளவிலான கால்பந்தாட்ட போட்டி


மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது.


திருமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கால்பந்தாட்ட போட்டியில் 20-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன.

இந்த நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் டால்பின் மற்றும் அரசரடி அணிகள் மோதின.


இதில், டால்பின் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்று கோப்பையை கைப்பற்றியது. முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 7 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.