கடலூர் அருகே, மாவட்ட அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில், மாணவர்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள புதுக்கூரைப்பேட்டை பகுதியில், மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியை, தனியார் பள்ளியின் தாளாளர் விஜயகுமாரி, குத்து விளக்கு ஏற்றி, துவக்கி வைத்தார்.
இதையடுத்து, மாணவர்களிடம் உரையாற்றிய காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆரோக்யராஜ், படிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல், விளையாட்டு போட்டிகளிலும் மாணவர்கள் பங்கு பெற வேண்டும் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியின் முடிவில், போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.