அரசு ஊழியர்களால் மன உளைச்சல்..! புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வேதனை..!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. மாநில திட்ட வளர்ச்சியில் மத்திய அரசின் தயவு இருப்பதால், மாநில அரசு அந்தஸ்து அவசியம் பல்வேறு தலைவர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி அரசு ஊழியர்கள் தொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை செயல்படுத்தக் கூடாது என்ற நோக்கில் அதிகாரிகள் உள்ளனர். இதனால் நிர்வாகம் செய்வதில் சிரமம் உள்ளது என ஆள்பவர்களுக்கு தான் தெரியும் என வேதனை தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் அரசியலுக்கு வரவிரும்புவோர் சிரமம் இல்லாமல் செயல்பட வேண்டும் என்ற நோக்கிலே மாநில அந்தஸ்து வேண்டும் என்று கேட்கிறேன் தெரிவித்தார். கடந்த சில நாட்களாகவே இது குறித்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது.