மீண்டும் விவாகரத்தா..? டிவிட்டரில் அதிர்ச்சி கொடுத்த செல்வராகவன்..!

காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். புதுவிதமான படங்களை இயக்கி ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் இவர், சமீபகாலமாக நடிகராகவும் வலம் வருகிறார்.

கடந்த 2006-ஆம் ஆண்டு நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்த செல்வராகவன், சில ஆண்டுகளிலே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். பின்னர் தன்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கீதாஞ்சலி என்பவரை மறுமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்றை பதிவிவிட்டுள்ளார். அதில் தனியாகத்தான் வந்தோம், தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டிகிடைக்கிறது..? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும் என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் 2-வது மனைவியையும் விவாகரத்து செய்ய போகிறாரா..? என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.