தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சத்யராஜ். இவரது மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா, கடந்த சில மாதங்களாக, தனது சமூக வலைதளப் பக்கங்களில், அரசியல் ரீதியான கருத்துக்களை கூறி வந்தார்.
இதனால், இவர் அரசியலில் நுழையப் போகிறாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்த கேள்விக்கு தானே பதில் அளித்த திவ்யா, “ஆம் அரசியலில் ஈடுபட போகிறேன். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, எந்த கட்சி என்பதை அறிவிப்பேன்” என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று திமுகவில் திவ்யா சத்யராஜா இணைந்துள்ளார். திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இந்த நிகழ்வு நடந்த நிலையில், கட்சியின் முக்கிய நிர்வாகிகளான கே.என்.நேரு, சேகர்பாபு, டி.ஆர்.பாலு ஆகியோர், உடன் இருந்தனர்.