தீபாவளி- சென்னையில் 347 வழக்குகள் பதிவு!

நாடு முழுவதும் நேற்று (அக்.31) தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாப்பட்டது. ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையின் போது பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க அரசு மற்றும் நீதிமன்றம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது வருகிறது.

குறிப்பாக தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்க நீதிமன்றம் காலை 6:00 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரை நேரம் விதித்துள்ளது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை கடைப்பிடிக்குமாறு காவல் துறையும் பொதுமக்களை அறிவுறுத்தி வருவதுடன் நீதிமன்ற உத்தரவை மீறும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.‌

இந்த நிலையில் நேற்று தீபாவளி கொண்டாட்டத்தின் போது சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரம் தாண்டி பட்டாசு வெடித்ததாக 347 வழக்குகள் காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக மைலாப்பூரில் 18 வழக்குகளும், பூக்கடையில் 20 வழக்கு என சென்னை முழுவதும் 347 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதே போல் ஆவடியில் 39 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News