குவாண்டின் டெரண்டினோ இயக்கத்தில் உருவான ஜாங்கோ படத்தின் மூலம், தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஜேமி ஃபாக்ஸ். இவர், ட்ரீம் கேர்ள்ஸ், மியாமி வைஸ், பேபி டிரைவர், ரே உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவின் கலிஃபோர்னியா பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில், தனது பிறந்த நாளை முன்னிட்டு நண்பர்களுக்கு பார்ட்டி வைத்துள்ளார்.
அப்போது, ஜேமி ஃபாக்ஸின் குழுவுக்கும், ஓட்டலில் இருந்த இன்னொரு குழுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், எதிர் தரப்பினர் தாக்கியதில், ஜேமி ஃபாக்ஸ் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.