Connect with us

Latest Tamil News, Tamil Nadu News Today, இன்றைய செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிப்பு: பிரேமலதா விஜயகாந்த்!

தமிழகம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிப்பு: பிரேமலதா விஜயகாந்த்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது என்று தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது. இதுவரை தமிழகத்தில் நடந்த அனைத்து இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களில் போட்டியிட்ட தேமுதிக, விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணிக்கிறது. காரணம் தேர்தல்கள் என்பது ஜனநாயக ரீதியாக நேர்மையாக நடக்கவேண்டிய தேர்தல்கள். இன்றைய கால கட்டத்தில் ஆட்சியர்களின் அதிகாரத்தால் தேர்தல்கள் தவறாக நடத்தப்படுகிறது.

இந்த இடைத்தேர்தல் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் உழைப்பு, நேரம், பணம் அனைத்தும் விரயம் செய்ய விரும்பவில்லை. எங்கள் தொண்டர்களின் உழைப்பை வீணடிக்க விரும்பாத காரணத்தால் தேமுதிக இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது. இன்றைய ஆட்சியர்களின் கரங்களில் தேர்தல் என்கிற ஜனநாயகம் மிக பெரிய கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் நாம் வாழ்கின்றோம் என்று நாம் பெருமையாக சொல் கொண்டாலும் ஜனநாயகம் என்பது இன்றைக்கு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது என்பதை ஒட்டு மொத்த மக்களும், கட்சியினரும் அறிவர்.

எனவே இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிக்கிறது. ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அதிமுக அறிவித்துள்ளது. இடைத்தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறாது என்பதால் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top