தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் 13-வது வார்டில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தங்களுக்கு ஆறு மாதங்களாக சாலை வசதி மற்றும் கழிவுநீர் வசதியின்றி அவதிப்பட்டு வருவதாக தொடர்ந்து வார்டு உறுப்பினர் ரேணுகாதேவி பரமசிவனிடம் வலியுறுத்தி வந்தனர்.
மேலும், திமுக கவுன்சிலர் தன்னுடைய வார்டுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள சாலை அமைக்கும் பணியை திமுகவை சேர்ந்த நபருக்கு டெண்டர் கொடுத்துள்ளார்.
சாலை அமைக்கும் பணியை தொடங்கிய நிலையில் அங்கு வசிக்கும் பொது மக்கள் கழிவுநீர் செல்வதற்கான கால்வாய்யை சரி செய்யாமல் டெண்டர் எடுத்தவர் சாலை அமைக்கும் பணியை தொடங்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கவுன்சிலரின் கணவரிடம் கேட்டனர் அதற்கு உரிய பதிலளிக்காமல் மிரட்டும் வகையில் பேசி உள்ளார். இது குறித்தான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.