உசிலம்பட்டியில் திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா

உசிலம்பட்டியில் திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் அவரது திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

திமுகவின் மூத்த நிர்வாகியாகவும், திமுக பொதுச் செயலாளராக இருந்து மறைந்த அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா இன்று தமிழகம் முழுவதும் உள்ள திமுக நிர்வாகிகளால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு உசிலம்பட்டி திமுக நகர் கழகத்தின் சார்பில் திமுக முன்னாள் பொதுச் செயலாளர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா இன்று அனுசரிக்கப்பட்டது.

உசிலம்பட்டி திமுக நகர் கழக செயலாளர் எஸ்.ஓ.ஆர்.தங்கப்பாண்டியன் தலைமையில் உசிலம்பட்டி நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள், மாவட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டு அன்பழகன் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.