திமுக நிர்வாகி திருமண நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு: பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட எம்எல்ஏ!

திமுக நிர்வாகி திருமண நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட எம்எல்ஏ ஜயப்பன் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் – புதுச்சேர் எல்லையில் தமிழக பகுதியான நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திமுக நிர்வாகி மணிவண்ணன் இவருடைய மகள் மஞ்சள் நீராட்டு விழா நேற்று இரவு நல்லாத்தூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக கடலூர் திமுக எம்எல்ஏ ஜயப்பன், திமுக நிர்வாகிகளுடன் இரவு சுமார் 9,30 மணி அளவில் திருமண மண்டபத்திற்கு காரில் சென்றுள்ளார்.

அவர் காரில் இருந்து இறங்கி மண்டபத்திற்குள் சென்று கொண்டிருக்கும் போதே மண்டபத்தில் நுழைவு வாயில் அருகே ஐஸ்கிரீம் வழங்கப்பட்டு வந்தது. அப்போது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பெட்ரோல் நிரப்பி பீர் பாட்டில் தீவைத்து தூக்கி உள்ளே வீசிவிட்டு சென்று விட்டனர்.

அந்த பாட்டில் பறந்து வந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்காக நின்று கொண்டிருந்த ஒருவர் மீது விழுந்து தரையில் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அலறியடித்து ஓடினர். இதில் யாருக்கும் எந்தவிதமாக பாதிப்பும் இல்லை. ஐயப்பன் எம்எல்ஏ-வை உடனடியாக அங்கிருந்தவர்கள் பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கிருந்த பொதுமக்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று (ஜூலை.10) இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடலூரில் உள்ள எம்எல்ஏ ஐயப்பன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து 2 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திமுக எம்எல்ஏ கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News