தி.மு.க முன்னாள் எம்.பி டாக்டர் மஸ்தான் காலமானார்..!

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத் துணைத் தலைவரும், திமுக சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவுச் செயலாளருமான டாக்டர் மஸ்தான் காலமானார்..

சென்னை ராயப்பேட்டை பாலாஜி நகரில் வசித்து வருபவர் டாக்டர் மஸ்தான். இவர் கடந்த 1995 முதல் 2001 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு தனது உறவினர் இம்ரான் என்பவர் உடன் சென்னையில் இருந்து அழைப்பிதழ் வைப்பதற்காக செங்கல்பட்டு நோக்கி சென்று போது தூங்கிய நிலையிலேயே மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட மஸ்தான் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது மஸ்தானின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த டாக்டர் மஸ்தான், தற்போது தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவராகவும் திமுகவின் சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு செயலாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த மஸ்தானின் உடலுக்கு இன்று பிற்பகல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளார்.