கொடநாடு கொலை வழக்கு குற்றவாளிகளைக் கண்டறிய வலியுறுத்தி ஆகஸ்ட் 1ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தனர்.
வைத்தியலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜெயலலிதா மிகவும் நேசித்த கொடநாடு பாங்களா – ஒன்றரை கோடி தொண்டர்கள் குடியிருந்த கோயில் என கும்பிட்டு வந்த நிலையில் – ஓம் பகதூர் எனும் காவலாலியை கொலை செய்யப்பட்டு சந்தேக மரணங்கள் உட்பட 6 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
இத்தகைய கொடூர நிகழ்வின் சாட்சியமான கிருஷ்ண பகதூர் என்பவரை இதுவரை விசாரணைக்கு உட்படுத்தவில்லை.
திமுக தேர்தல் அறிக்கையிலும் ஆட்சிக்கு வந்ததும் கொடநாடு வழக்கை விசாரிப்போம் என்றார். ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் முடிவுற்றும் இதுவரை விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்டவர்களை கண்டறிந்து இதுவரை தண்டிக்கப்படாமல் இருப்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே இந்த வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு அரசு உரிய தண்டனை பெற்று தர வேண்டும்.
திமுக அரசு இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தமல் தூங்கி வழிக்கிறது. இதனை கண்டித்து
வரும் ஆகஸ்ட் 1ம் தேதி இதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.